பிரக்ஞானந்தா குடும்பத்தினரை நேரில் அழைத்து பாராட்டிய பிரதமர் மோடி!

உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவையும் அவரது குடும்பத்தினரையும் பிரதமர் மோடி(pm modi) நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் அசர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடைபெற்றது. ஆகஸ்ட் 24 நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனும் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 35வது ஓவரில் இரு அணிகளும் டிராவில் முடிவடைந்தன. ஆட்டத்தின் போது பிரக்னாந்தாவின் நேரம் குறைவாக இருந்தாலும், அவர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தை டிரா செய்தார்.

இந்த நிலையில் வெற்றியை தீர்மானிக்கும் டை பிரேக்கர் சுற்றுப் போட்டி நடைபெற்றது. டைபிரேக்கர் முதல் சுற்றில் நார்வே வீரர் கார்ல்ஸன் வெற்றி பெற்றார். டை பிரேக்கர் முதல் சுற்றில் வெற்றி பெற கடைசி வரை போராடி பிரக்ஞானந்தா வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இந்த நிலையில் நாடு திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவையும் அவரது குடும்பத்தினரையும் பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ள பிரக்ஞானந்தா, பிரதமர் மோடியை சந்தித்தது பெருமையாக உள்ளது. என்னையும், எனது பெற்றோரையும் ஊக்கப்படுத்திய பிரதமருக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

பிரக்ஞானந்தாவின் இந்த பதிவிற்கு பதில் அளித்து பாராட்டியுள்ள பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் உங்களையும், உங்களது குடும்பத்தினரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் ஆர்வத்தையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்துகிறீர்கள். இந்தியாவின் இளைஞர்கள் எந்த களத்தையும் கைப்பற்ற முடியும் என்பதற்கு நீங்கள் ஓர் உதாரணம் பிரக்ஞானந்தா. உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்.இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

Total
0
Shares
Related Posts