பஞ்சாப்பில் பிரதமர் மோடி சென்ற வாகனத்தை மறித்து போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு நிலவியது.
பஞ்சாப்பில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி தரை வழியாக காரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது வாகனம் ஒரு பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது அந்த சாலையில் காரை மறித்து சிலர் போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த போராட்டத்தால் சுமார் 20 நிமிடம் பிரதமரின் கார் அந்த பாலத்திலேயே நின்றுள்ளது. பிறகு உரிய பாதுகாப்பு இல்லை என்று பாதிண்டா விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி திரும்பியுள்ளார்.
பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிரதமர் மோடி கலந்துகொள்ள இருந்த அந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.