பாமக தனது முழுமையான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தருமபுரியில் சவுமியா அன்புமணி, காட்டுமன்னார்கோவிலில் மருத்துவர் அன்பு சோழன், பெரம்பூரில் திலகபாமா உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
- பெரம்பூர் -ம. திலகபாமா
- தருமபுரி – சவுமியா அன்புமணி,
- விருத்தாசலம் – மருத்துவர் தமிழரசி ஆதிமூலம்,
- சேலம் மேற்கு – மு. கார்த்தி,
- பென்னாகரம் – பாடி வெ. செல்வம்,
- போளூர் – சி.ஆர். பாஸ்கரன்,
- திருப்போரூர் – வழக்கறிஞர் கே.பாலு,
- ஜெயங்கொண்டம் – க. வைத்தி,
- சேலம் வடக்கு – எஸ். சதாசிவம்,
- விக்கிரவாண்டி – சி. சிவக்குமார்,
- சோளிங்கர் – க. சரவணன்,
- மயிலாடுதுறை சித்தமல்லி ஏ. பழனிச்சாமி,
- உத்திரமேரூர் – பெ. மகேஷ்குமார்,
- ரிஷிவந்தியம் – அ.ப. செழியன்,
- காட்டுமன்னார் கோயில் (தனி) – மருத்துவர் அன்பு. சோழன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

