padma bhushan award-2024-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் மொத்தம் 132 பேருக்கு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும்,பத்ம விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 132 பேருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு இந்திய அரசு பத்ம விருதுகள் வழங்கி வருகிறது.
அந்த வகையில் நேற்று 2024-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் முதலிய பத்ம விருதுகள் தேமுதிக தலைவர் விஜயகாந்த்,
முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியான 96 வயது பாத்திமா பீவி, ஊடகவியாலாளர் ஹோர்முஷ்ஜி,
வங்காள மற்றும் இந்தி படங்களின் பிரபல நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, பிரபல தொழிலதிபர் சீதாராம் ஜிண்டால், பாக்ஸ்கான் நிறுவன சி.இ.ஓ. யங் லியூ, மருத்துவர் அஸ்வின் மேத்தா,
முன்னாள் மத்திய அமைச்சர் சத்யப்ரதா முகர்ஜி, முன்னாள் மத்திய அமைச்சர் ராம் நாயக், மருத்துவர் தேஜஸ் மதுசூதன் படேல்,
முன்னாள் மத்திய அமைச்சர் ஒலஞ்சேரி ராஜகோபால், மராத்தி திரைப்பட இயக்குனர் ராஜ்தத், புத்த மத தலைவர் டோக்டான் ரின்போச்,
இந்தி பட இசையமைப்பாளர் பியாரேலால் சர்மா, மருத்துவர் சந்திரேஷ்வர் தாக்கூர், பிரபல பாடகி உஷா உதுப், பத்திரகையாளர் குந்தன் வியாஸ் ஆகியோருக்கு
மொத்தமாக 132 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க :http://உலக சாதனை: புத்தகத்தில் இடம் பிடித்த 6 வயது சிறுவன்..!
இதில் கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்த தமிழகத்தை சேர்ந்தவர்கள் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் , 2024-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் மொத்தம் 132 பேருக்கு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியாளிப்பதாகவும்,
பத்ம விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 132 பேருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அன்புமணி இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்..
இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும்.இரண்டாவது சிறந்த விருதான பத்மவிபூஷன் விருதுக்கு தேர்வாகியுள்ள இந்தியக் குடியரசின் முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு,
இதையும் படிங்க :https://x.com/ITamilTVNews/status/1750823328141746328?s=20
முன்னாள் மத்திய அமைச்சர் சிரஞ்சீவி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைஜயந்திமாலா உள்ளிட்ட ஐவருக்கும், பத்மபூஷன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட 17 பேருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த கலை ஆசிரியர் பத்ரப்பன், விளையாட்டு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, எழுத்தாளர் ஜோ டி குரூஸ், மருத்துவர் நாச்சியார் ஆகிய ஐவருக்கு பத்மஸ்ரீ விருது (padma bhushan award)வழங்கப்படுகிறது.
அவர்களுக்கும், பத்ம விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 132 பேருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.