சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி போராட்டம் நடத்த வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து போராட நாம் தமிழர் ககட்சியினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கூடியிருந்தனர் . போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்திருந்த நிலையில் கட்சினருடன் போராட்டத்தில் கலந்துகொள்ள சீமான் வந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் சீமானை தடுத்து நிறுத்தினர் .
Also Read : “மகளின் துப்பட்டாவில் மடிந்த தந்தை” சின்னத் திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை..!!
தடுத்து நிறுத்திய போலீசாரிடம் நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சீமானுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையம் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.
சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து பலரும் போராடி வரும் நிலையில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போலீசார் தரப்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.