கடந்த 2018ம் ஆண்டு ஆர்.ஏ.புரம் பகுதியில் வாகன சோதனையின் போது மது அருந்தி பைக் ஓட்டியதாக பைக் சாவியை போலீசார் பறித்ததால், அடையாற்று ஆற்றில் குதித்து உயிரிழந்த இளைஞர் – போக்குவரத்து எஸ்.ஐ. விஜயரங்கன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
ராதாகிருஷ்ணன் என்பவர் ஆற்றில் குதித்ததும், உடனிருந்த நண்பர் போலீசாரிடம் அவரை காப்பாற்றும்படி கெஞ்சியும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
Also Read : குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!!
தன் மகனின் உயிரிழப்பு தொடர்பாக ராதாகிருஷ்ணனின் தாயார் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
ராதாகிருஷ்ணன் மது அருந்தி வாகனம் ஓட்டியதற்கான ஆதாரங்களை போலீசார் சமர்ப்பிக்கவில்லை என இவ்வழக்கை விசாரித்த ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், மகனை இழந்த ரேவதிக்கு ₹3 லட்சம் இழப்பீடாக வழங்கவும், எஸ்.ஐ. விஜயரங்கன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு