சென்னை மாநகரத்தில் மூன்றாவது கண் திட்டத்தை நடைமுறைப்படுத்திய டிஜிபி ஏ.கே விஸ்வநாதன் இன்றுடன் காவல் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
டி.ஜி.பி., நிலை அதிகாரியும், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய இயக்குனருமான ஏ.கே.விஸ்வநாதன் இன்றுடன் பணி ஓய்வு பெற்றார் . இதையடுத்து சென்னை எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் டிஜிபி ஏ.கே விஸ்வநாதனுக்கு பிரிவு உபச்சார அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது .
இந்நிகழ்ச்சியில் தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால், புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் பங்கேற்றனர் .
Also Read : உயிர்பலி வாங்கிய வயநாடு நிலச்சரிவு – அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரண உதவி..!!
இதையடுத்து பேசிய டிஜிபி ஏ.கே விஸ்வநாதன் கூறியதாவது :
இன்று கடைசியாக என்னுடைய காவல் சீருடையை அணியும் போது கண் கலங்கினேன் . அடுத்த பிறவி ஒன்று இருந்தால் அப்போதும் காவல்துறையிலையே பணியாற்ற விரும்புகிறேன் என உருக்கமாக தெரிவித்தார்.
காவல்துறையில் 34 ஆண்டு பணிக்காலம் இன்றுடன் ஒய்வு பெற்றதை அடுத்து உருக்கமாக பேசிய டி.ஜி.பி ஏ.கே.விஸ்வநாதன் குற்றவாளிகளை காவல்துறையினர் எளிதில் கண்டறிய face detector app என்ற செயலி அறிமுகப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.