பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்ற மக்கள் தற்போது விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பி வரும் நிலையில் போக்குவரத்தில் சில கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது.
சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் பரனூர் சந்திப்பில் திரும்பி, சர்வீஸ் சாலையைப் பயன்படுத்தி ஸ்ரீபெரும்புதூர் வழியாக பயணிக்க வேண்டும்.
வாகனங்கள் எஸ்.பி. கோயில் ஒரகடம் சந்திப்பில் திரும்பி, ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக செல்ல வேண்டும்.
திருப்போரூர் வழியாக வரும் கனரக வாகனங்கள் டாக்டர் அம்பேத்கர் சிலையில் திரும்பி, செங்கல்பட்டு வழியாக பயணிக்க வேண்டும்.
Also Read : இளம் வயதில் இன்ஸ்டா பிரபலத்திற்கு நேர்ந்த சோகம் – கலங்கும் ரசிகர்கள்..!!
ஜிஎஸ்டி ரோடு, வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை, ஓஎம்ஆர் மற்றும் ஈசிஆர் சாலைகளில் கனரக வாகனங்களுக்கு இன்று பிற்பகல் 2 மணி முதல் ஜன.20 வரை அனுமதி இல்லை.
பல்லாவரம் புதிய பாலத்தில் இன்று பகல் 2 மணி முதல் திங்கட்கிழமை பகல் 12 மணி வரை சென்னை நோக்கி ஒருவழி போக்குவரத்தாக தேவைக்கு ஏற்ப மாற்றப்படும்.
ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்தை விரைவுப்படுத்த ஆம்னி பேருந்துகள் வெளிவட்ட சாலை வழியாக திருப்பி அனுப்பப்படும்.
சிரமம் இன்றி மக்கள் சென்னைக்கு திரும்ப ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.