பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு நீதி கேட்டு அவரது மனைவி பொற்கொடி உள்பட பலரும் போராட்டம் நடத்திய நிலையில் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம்கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தமிழகத்தை உலுக்கிய இந்த கொலை வழக்கில் இதுவரை 24க்கும் மேற்பட்டரோ கைது செய்யப்பட்டு அவர்களிடம் தனிப்படை போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர் .
Also Read : நான் அனுபவித்ததை தம்பி விஜய்யும் அனுபவிப்பார் – வார்னிங் கொடுத்த சீமான்..!!
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உரிய நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, இயக்குனர் பா ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, பா.ரஞ்சித் உள்ளிட்ட 1500 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.