இமாச்சல் பிரதேசத்தில் விபத்தில் மாயமான வெற்றி துரைசாமியை (Vetri Duraisamy) தேடும் பணி 7வது நாளாக நடைபெற்று வரும் நிலையில் DEMO பொம்மையை ஆற்றில் வீசி, மீட்புக் குழுவினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றர்
சைதைதுறை சாமியின் மகன் வெற்றி துரைசாமி, தனது அடுத்த திரைப்படத்திற்காக லொகேஷன் பார்ப்பதற்காக உதவியாளரும் நண்பருமான கோபிநாத்துடன் இமாச்சல பிரதேசம் சென்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இருவரும் உணவகம் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு மாலை நேரத்தில் வாடகை காரில் சட்லஜ் நதி அருகே உள்ள நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தார்.
அப்போது போது ஓட்டுநர் டென்சினுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கார் நிலைதடுமாறி சட்லஜ் நதிக்குள் பாய்ந்தது. திங்கள் கிழமை ஓட்டுநரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட கோபிநாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.ஆனால் வெற்றி துரைசாமிக்கு என்ன ஆனது என தெரியாத நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், கடற்படையினர் என பல்வேறு வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சட்லஜ் நதிக்கரையோரம் வசிக்கும் மக்களின் உதவியையும் வெற்றி துரைசாமியின் (Vetri Duraisamy) குடும்பத்தினர் நாடியுள்ளனர்.
மாயமான வெற்றியை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் வெற்றியின் ஐஃபோன், மட்டும் சூட்கேஸ் உள்ளிட்ட உடமைகள் மீட்கப்பட்டுள்ளன.
பாறை இடுக்குகளில் மூளை திசு கிடைத்துள்ளது.
இதையும் படிங்க : interpols: பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – நீடிக்கும் சிக்கல்! இன்டர்போலை நாடும் போலீஸ்
இது வெற்றியுடையதா என அறிய டிஎன்ஏ சோதனைக்காக அனுப்பி வைகப்ட்டுள்ளது. சைதை துரைசாமியின் டிஎன்ஏவும் சோதனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இன்று 7வது நாள் ஆகியும் அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
https://x.com/ITamilTVNews/status/1756174635488641165?s=20
இந்த நிலையில் விபத்து எப்படி நடந்தது என்பதை விவரிக்கும் விதமாக அவரைப் போல DEMO பொம்மையை ஆற்றில் வீசி, விபத்து நடந்தபின் உடல் எவ்வழியாக நதியில் சென்றிருக்கும் என தெரிந்து கொள்ள மீட்புக் குழுவினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்கூபா டைவிங் வீரர்கள், போலீசார், தேசிய பேரிடர் மீட்புபடையினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெற்றி துரைசாமிக்கு என்ன ஆனது என்பது இதுவரை தெரியாத நிலையில், எப்படியாவது தங்கள் மகன் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையில் அவரது குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்.