Site icon itamiltv.com

ரூ.50,000க்கு மேலான பணம் எடுத்துச் சென்றால்.. இதுதான் தண்டனை- போலீஸ் அலெர்ட்!

2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடக்க இருக்கிற நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை குறித்த விதிமுறைகள் கடுமையாக அமலில் உள்ளன.

தேர்தல் நடத்தை விதிமுறைகள்

அதிகாரிகள் தெரிவிப்பதாவது, உரிய ஆவணங்களுடன் இல்லாமல் ரூ.50,000க்கு மேல் பணம் அல்லது மதிப்புள்ள பொருட்களை எடுத்துச் செல்ல முயன்றால் அவை பறிமுதல் செய்யப்படும்.

தேர்தல் பறக்கும் படையினரும், நிலையான கண்காணிப்பு குழுக்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. விதிமுறைகளை மீறி எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படுகின்றன.

இந்தப் பறிமுதல் செய்யப்பட்ட பணம் அல்லது பொருட்கள் தனிப்பட்ட தேவைக்காக எடுத்துச் செல்லப்பட்டவை எனக் காட்டும் சரியான ஆவணங்களை சமர்ப்பித்தால் மீண்டும் பெற முடியும்.

காவல்துறையினர் எச்சரிக்கை

இதற்காக, திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) மற்றும் மாவட்ட கருவூல அலுவலர் ஆகியோரைக் கொண்ட மாவட்ட குறைதீர்க்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் புதிய வளாகத்தில், இரண்டாம் தள கூட்ட அரங்கில், தினமும் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை கூட்டம் நடத்துகிறது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களுக்கான ஆவணங்களை நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆவணங்கள் சரியானதாக இருந்தால், உரிய விசாரணை முடிந்த பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களை மீட்டெடுக்க அனுமதி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) தொலைபேசி எண் 9715948551-ல் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version