டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். அநீதிக்கு எதிரான இந்த வெற்றி, நம் நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இதனை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மே 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, தன்னுடைய கைதை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் ஜெக்ரிவால் மனுத்தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த முறை வந்தபோது, தேர்தல் காரணமாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதையும் படிங்க: ”டெல்லியில் கெஜ்ரிவால் கைது..”சென்னையில் தயாநிதி மாறன் செய்த செயல்!
ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் மே 10ஆம் தேதி (இன்று) இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
அதன்படி, டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனு மீது இன்று உத்தரவு பிறப்பித்த டெல்லி உயர் நீதிமன்றம்,அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. . ஜூன் 2ஆம் தேதி அவர் சரணடையுமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். அநீதிக்கு எதிரான இந்த வெற்றி, நம் நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,” டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். அநீதிக்கு எதிரான இந்த வெற்றி, நம் நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.