தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் மற்றும் மிகை ஊதியம் வழங்க ₹163.81 கோடி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
சி மற்றும் டி பிரிவு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . அதனபடி சி, டி பிரிவைச் சேர்ந்த பணியாளர்களுக்கு ரூ.3000 போனஸ் வழங்கப்படும்.
Also Read : தமிழக வீராங்கனைகள் உள்பட 32 பேருக்கு மத்திய அரசின் அர்ஜுனா விருது அறிவிப்பு..!!
தொகுப்பூதியம், சிறப்புக் கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூ.1,000 சிறப்பு போனஸ் வழங்கப்படும்.
சி, டி பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 பொங்கல் போனஸ் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.