மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) தலைவர் பதவியை மனோஜ் சோனி ராஜினாமா செய்துள்ளார்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) தலைவராக, மனோஜ் சோனி பதவி வகித்து வந்தார். இவருக்கு வயது 59. இவர் 2017ம் ஆண்டு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக சேர்ந்தார். 2023ம் ஆண்டு மே மாதம் யு.பி.எஸ்.சி., தலைவராக பதவியேற்றார்.
Also Read : ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு – கொலையாளிகளின் செல்ஃபோன்கள் கூவம் ஆற்றில் கண்டுபிடிப்பு..!!
சமீபத்தில், யு.பி.எஸ்.சி தேர்வில் சர்ச்சைகள் எழுந்த நிலையில், அவர் பதவியை ராஜினாமா செய்தார். தான் ராஜினாமா செய்வதாக அவர் கொடுத்த கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுவதாக மனோஜ் சோனி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, பார்வை மற்றும் மன ரீதியிலான பிரச்னை உள்ளிட்டவற்றை மறைத்தது மற்றும் பல சர்ச்சைகளில் சிக்கி உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா கேத்கரிடம் விளக்கம் கேட்டு யுபிஎஸ்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இவருக்கு ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, தலைவர் பதவியை மனோஜ் சோனி ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.