தேனி கஞ்சா வழக்கில் ஆஜராகாததால் நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
யூடியூபில் பிரபலமாக வலம் வந்த சவுக்கு சங்கர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பெண் போலீசார் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் பற்றியும் பாலியல் தொடர்பான அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக புகார்கள் ஏற்ப்பட்ட நிலையில் . அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
Also Read : “இதாங்க உண்மையான காதல்” காதலிக்காக சுமார் 200 கி.மீ பயணித்த ஆண் புலி..!!
இதையடுத்து கோவை சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பின் ஜாமீனில் வெளிவந்தார்.
இது ஒரு புறம் இருக்க தேனியில் சவுக்கு சங்கர், தனது உதவியாளர், டிரைவருடன் தங்கியிருந்த விடுதியில் கஞ்சா பதுக்கியதாக பழனிசெட்டிபட்டி போலீசார் அவர் மீது வழக்குபதிவு செய்தனர்.
இந்நிலையில் கஞ்சா வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் சவுக்கு சங்கருக்கு மதுரை போதைபொருள் தடுப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனையடுத்து சவுக்கு சங்கர் தற்போது சென்னை தேனாம்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.