மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டில் தபால் வாக்கு சேகரிக்கும் பணி (Postal ballot) கடந்த 4 ஆம் தேதியை தொடங்கிய இன்று மாலையுடன் நிறைவடைய உள்ளது.
இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ள மக்களவை தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக தமிழகத்தில் 68,320 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
வாக்காளர்களை 3 பிரிவாக பிரித்து வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது
இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களும் வைக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நேரடியாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிப்பவர்கள் முதல் பிரிவில் உள்ளனர். தபால் வாக்குகள் அளிப்பவர்கள் 2-வது பிரிவில் உள்ளனர். 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் 3-வது பிரிவில் உள்ளனர்.
Also Read : https://itamiltv.com/4-crore-issue-nainar-nagendran-summoned-to-appear-on-april-22/
முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிப்பதற்கு சிரமம் ஏற்படும் என்பதால் அவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ( 04.04.2024 ) அன்று அரசு ஊழியர்கள் மாற்று திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு தபால் வாக்குகளை பெறும் பணியானது தொடங்கப்பட்டது.
விருப்பம் உள்ள முதியவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் நேரடியாக (Postal ballot) வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்த நிலையில், இன்று மாலையுடன் தபால் வாக்கு சேகரிக்கும் பணி நிறைவடைய உள்ளது.