பரோட்டா சாப்பிட்ட கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வதுவார்பட்டி கிராமத்தை சேந்தவர் அனந்தாயி. 2 6 வயது நிரம்பிய இவர் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவருக்கு வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு பரோட்டா சாப்பிட ஆசையாக இருந்ததால் ரோட்டோரக் கடையில் பரோட்டா வாங்கி சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து உடனடியாக அனந்தாயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ மனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அத்துடன் அவரது வயிற்றில் இருந்த இரண்டு குழந்தைகளும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு பரோட்டா சாப்பிட்டதால் தான் கர்ப்பிணிப் பெண் பலியானாரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பரோட்டா சாப்பிட்ட கர்ப்பிணிப் பெண் தனது இரட்டை குழந்தைகளுடன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.