“சினிமாவிலிருந்து விலகுகிறேன்.. எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு” – இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்!!

இயக்குநர் அல்ஃபோன்ஸ் என்னுடைய திரையுலக வாழ்க்கையை நிறுத்திக் கொள்கிறேன் என பதிவிட்டு பின் அந்தப் பதிவை தனது சமூக வலைதள பக்கங்களிலிருந்து நீக்கி விட்டார். ஆனாலும், அவர் பதிவிட்ட அந்த பதிவின் ஸ்கிரீன்ஷாட் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக இயக்குநர் அல்ஃபோன்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த அந்த பதிவில்..,

“என்னுடைய திரையுலக வாழ்க்கையை நிறுத்திக்கொள்கிறேன். எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருப்பதை நேற்று தான் கண்டறிந்தேன். நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை.

நான் குறைந்தபட்சம் ஓடிடி அளவிலான குறும்படங்கள், பாடல்கள், வீடியோக்களை தொடர்ந்து இயக்குவேன்.

நான் சினிமாவிலிருந்து வெளியேற விரும்பவில்லை. ஆனால் எனக்கு வேறு வழியுமில்லை. என்னால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை நான் கொடுக்க விரும்பவில்லை.

உடல்நலம் பலவீனமாகவோ அல்லது கணிக்க முடியாததாகவோ இருக்கும்போது, ​​​​வாழ்க்கை ‘இன்டர்வல் பஞ்ச்’ போல திருப்பத்தைக் கொடுத்துவிடுகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், அவரின் இந்த பதிவு பேசுபொருளானதும் அதை உடனே டெலீட் செய்து விட்டார். ஆனாலும் அவர் பதிவிட்ட அந்த பதிவின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்து அவரது ரசிகர்கள் விரைவில் அல்போன்ஸ் குணமாக வேண்டும் என பிரார்த்திப்பதாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Total
0
Shares
Related Posts