அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பேச்சு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்கவில் இன்னும் சில நாட்களில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் அதிபர் வேட்பாளர்களாக டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் களமிறங்கி உள்ளனர்.
இந்த இருவருக்கும் மத்தியில் கடுமையான போட்டி நிலவும் நிலையில் இருவருக்கும் நாளுக்கு நாள் ஆதரவு பெருகி கொன்டே செல்கிறது . இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பேச்சு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Also Read : ஹீலியம் பலூன் உதவியுடன் சிறிய ரக செயற்கைக்கோளை வானில் பறக்கவிட்ட கல்லூரி மாணவர்கள்..!!
ஜோ பைடன் மனநலம் பாதிக்கப்பட்டவர், கமலா ஹாரீஸ் பிறக்கும் போதே அப்படித்தான்” என முன்னாள் அதிபர் ட்ரம்ப் கடுமையான விமர்சித்துள்ளார் . எல்லை பாதுகாப்பு விவகாரங்களில் பைடனின் நிர்வாகத்தன்மையையும் ட்ரம்ப் மிக கடுமையாக சாடியுள்ளார்.
இந்நிலையில் ட்ரம்பின் இந்த சர்ச்சை மிகு பேச்சுக்கு, அவர் இருக்கும் குடியரசுக் கட்சியின் மூத்த தலைவர்களே அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கமலா ஹாரிசிடம் கோளாறு என எடுத்துக்கொள்ளக் கூடாது, அவர் கொள்கைகளில்தான் கோளாறு என குடியரசுக் கட்சித் தலைவர் லிண்ட்சே தற்போது சமாளித்து பேசியுள்ளார்.