வடகொரிவில் உணவு பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் அந்நாட்டு அதிபரின் அறிவிப்புக்கு உலக நாடுகள் கண்டனம்!

President-Kim-Jong-Un-instructs-the-people-of-North-Korea
President Kim Jong Un instructs the people of North Korea

வடகொரியாவில் உணவு பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் 2025ம் ஆண்டு வரை மக்கள் குறைந்த அளவில் உணவு உண்ணுமாறு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவுறுத்தியுள்ளார்.

வடகொரியாவில் விவசாயத்துக்கு தேவையான உரம், பூச்சிக்கொல்லி, உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சீனாவில் இருந்து வந்து கொண்டு இருந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா பரவியதால் வடகொரியாவுக்கு நோய் தொற்று வந்து விடக்கூடாது என்பதற்காக அதிபர் கிம் ஜாங் உன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார்.

இதனால் பொருட்கள் வருவது தடைப்பட்டு விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உணவு உற்பத்தி பல மடங்கு குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ வாழைப்பழம் 3,000 ரூபாய்க்கு மேல் விற்கும் அளவுக்கு உணவு பஞ்சம் நிலவுகிறது.
வடகொரியாவுக்கு உணவு பொருட்கள், உரங்கள், பூச்சிக்கொல்லிகளை விநியோகிக்கும் முக்கிய நாடான சீனாவின் எல்லையை கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக மூடியதே இதற்கு காரணம் என உலக சுகாதார நிறுவனம் கூறியது.

President-Kim-Jong-Un-instructs-the-people-of-North-Korea
President Kim Jong Un instructs the people of North Korea

இந்நிலையில் வெள்ளம் காரணமாக விவசாய உற்பத்தியில் இலக்கை எட்ட முடியவில்லை என அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்திருந்தார்.
அணு ஆயுத சோதனை காரணமாக பல நாடுகள் ஏற்கனவே பொருளாதார தடையும் விதித்துள்ளதால் நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது.
இந்த நிலையில் 2025ம் ஆண்டு வரை நாட்டு மக்கள் குறைவாக உண்ணும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்ற அதிபரின் உத்தரவு மக்களை மேலும் வதைப்பது போல் உள்ளதாக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Total
0
Shares
Related Posts