மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பல முக்கிய முன்னேற்றங்களை பகிர்ந்தார்.
தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள விரைவு ஈனுலை முதன்முறையாக ‘நிலைமாறு நிலை’ அடைந்திருப்பது, இந்திய அணுசக்தி துறைக்கு ஒரு பெரிய சாதனையாக அவர் குறிப்பிட்டார்.
முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த திட்டம், ஆற்றல் உற்பத்தியுடன் எதிர்கால எரிபொருள் தயாரிப்புக்கும் உதவும் எனவும் தெரிவித்தார்.
மேலும், காற்றாற்றல் உற்பத்தியில் இந்தியா வேகமாக முன்னேறி, 56 ஜிகாவாட் திறனை கடந்துள்ளதாக கூறினார். குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் இதில் முன்னிலை வகிக்கின்றன.
2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்க மாற்றமாகும் என்றும், மக்கள் தங்கள் தகவல்களை பாதுகாப்பாக வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வடகிழக்கு மாநிலங்களில் மூங்கில் தொழில் வளர்ச்சி அடைந்து வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருவதாகவும், சுற்றுச்சூழல் மற்றும் பாரம்பரிய வளர்ச்சிக்கும் இது உதவுவதாகவும் தெரிவித்தார்.
கோடை விடுமுறையில் குழந்தைகள் புதிய திறன்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

