செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியை பிரதமர் மோடி தனது இல்லத்திற்கு நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
ஹங்கேரியில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட்டில், ஸ்லோவேனியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியை இந்திய அணி சமன் செய்த நிலையில், புள்ளிகள் அடிப்படையில் இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, ஹரிகிருஷ்ணா, விதித் குஜ்ராத்தி ஆகியோர் அடங்கிய இந்திய அணியினர் தங்கம் வென்று தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்தனர் .
இதேபோல் இறுதிச் சுற்றில் அஜர்பைஜான் அணியை எதிர்கொண்ட இந்திய மகளிர் அணியும் 3.5 -0.5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்தது.
Also Read : மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் காய்கறிகளின் விலை உயர்வு..!!
45வது செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி தங்கம் வென்று தாய் நாட்டிற்கு பெரும் சேர்த்துள்ள நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணி வீரர், வீராங்கனைகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இளம் வீரர் பிரக்ஞானந்தா மற்றும் அர்ஜூன் எரிகாய்சி இருவரும் செஸ் விளையாட அதை உற்சாகமாக கண்டுகளித்தார் பிரதமர் மோடி.