கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது .
கர்நாடகாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் மேலாண்மைப் பதவிகளில் 75 சதவீதம், அதற்குக் கீழுள்ள பதவிகளில் 50 சதவீதம் கன்னடர்களுக்கே முன்னுரிமை தரும் சட்ட வரைவு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Also Read : ஆன்லைன் மூலம் வீடுகளுக்கே மதுவை கொண்டு சென்று விற்க திட்டமா..? – ராமதாஸ் காட்டம்..!!
கர்நாடகாவில் 15 ஆண்டுகள் வசித்து, கன்னடத்தில் பேச, எழுத, படிக்க தெரிந்தவர்கள் அனைவரும் கன்னடர்கள் என்று அம்மாநில அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.
அதே சமயம், மேல்நிலைப்பள்ளியில் கன்னடத்தை ஒரு பாடமாக படிக்காதவர்கள் கன்னட மொழித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.