வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிரியங்கா காந்தி வரும் 28 ஆம் தேதி எம்.பி.யாக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேரளா மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி தனது முதல் தேர்தலில் சகோதரரான ராகுல் காந்தியின் சாதனையை முறியடித்து அபார வெற்றி பெற்றார்.
வயநாட்டில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தியை நிறுத்தும் முடிவினை காங்கிரஸ் எடுத்ததைத் தொடர்ந்து வயநாட்டில் போட்டியிட்டு பிரியங்கா தனது தேர்தல் பயணத்தில் கம்பீரமாக அடியெடுத்து வைத்தார்.
இந்நிலையில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் வாக்குகள் கடந்த 23 ஆம் தேதி எண்ணப்பட்டது இதில் வயநாடு இடைத்தேர்தலின் வாக்குகளும் எண்ணப்பட்டது . அதன்படி முதல் முறை தேர்தல் களத்தை சந்தித்துள்ள பிரியங்கா காந்தி 6,22,338 வாக்குகள் பெற்றுள்ளார்.
சந்தித்த முதல் தேர்தலிலேயே பிரியங்கா காந்தி வரலாற்று வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்து வரும் நிலையில் தற்போது அவர் வரும் 28 ஆம் தேதி எம்.பி.யாக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.