வயநாடு மக்களவை உறுப்பினரும், தனது தங்கையுமான பிரியங்கா காந்தியின் முதல் நாடாளுமன்ற உரைக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக முதல் முறை தேர்தல் களம் கண்ட பிரியங்கா காந்தி தனது முதல் தேர்தலில் சகோதரரான ராகுல் காந்தியின் சாதனையை முறியடித்து அபார வெற்றி பெற்றார்.
இதையடுத்து நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை குறித்து பலரும் நல்ல கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பிரியங்காவின் முதல் உரைக்கு ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
Also Read : புதுச்சேரி அரசு சொத்தை விலைக்கு கேட்டேனா..? இயக்குநர் விக்னேஷ் சிவன் மறுப்பு..!!
நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய முதல் உரையைவிட, பிரியங்காவின் முதல் உரை சிறந்தது; அவர் அனைத்திலும் என்னைவிட சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்.
பிரியங்கா காந்தியின் கருத்துகள், அவர் அவையில் எடுத்துரைத்த விதம் ஆகியவற்றை 20 ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய முதல் பேச்சுடன் ஒப்பிட்டு ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
2005ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி கரும்பு விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து பேசியதுதான் ராகுல் காந்தியின் முதல் நாடாளுமன்ற பேச்சுஎன்பது குறிப்பிடத்தக்கது