மேற்கு வங்கத்தில் உள்ள கல்லூரியின் வகுப்பறையிலேயே மாணவனை பேராசிரியை மணந்துக்கொள்வது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.
மேற்கு வங்கம் மாநிலம் ஹரிங்காடா பகுதியில் உள்ள கல்லூரியின் வகுப்பறையிலேயே முதலாமாண்டு மாணவனை பேராசிரியை திருமணம் செய்து கொண்டதாக வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது .
Also Read : ம.நீ.மவில் இருந்து நடிகை வினோதினி விலகல்..!!
அந்த வீடியோவில் இருவரும் மாலை மாற்றிக்கொண்டு நெற்றியில் பொட்டு வைப்பது போன்றும் அதற்கொரு சக மாணவர்கள் வாழ்த்து கூறுவது போன்றும் இடம்பெற்றுள்ளது.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது . பின்னர் இந்த வீடியோ குறித்து விளக்கம் கொடுத்துள்ள பேராசிரியை கூறியதாவது :
இது ‘புதிய மாணவர்களை வரவேற்கும் PROJECT-க்காக நடத்தப்பட்ட நிகழ்வு’ என்றும் வேண்டுமென்றே தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும் பேராசிரியை விளக்கம் கொடுத்துள்ளார்