நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளில் (Election Campaigns) குழந்தைகளை ஈடுபடுத்த கூடாது என அரசியல் கட்சிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நம் பாரத தேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது குழந்தைகளுக்கும் ஈடுபடுத்தப்படுவதாக பல தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் எந்த ஒரு காரணத்திற்காகவும் குழந்தைகள் எந்த ஒரு வகையிலும் ஈடுபடுத்தக் கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடுமையான கட்டுப்பாடுகளை போட்டுள்ளது .
தேர்தல் பரப்புரைகளில் குழந்தைகளை பயன்படுத்தக்கூடாது என மாநில தேர்தல் ஆணையத்திற்கும் தலைமை தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதன்படி சுவரொட்டிகள் ஒட்டுதல், துண்டு பிரசுரம் விநியோகம், முழக்கம் எழுப்புதல், பேரணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது.
தலைவர்கள், வேட்பாளர்கள் குழந்தைகளை கையில் தூக்கி செல்வது, பிரச்சாரம், பேரணியின் போது வாகனங்களில் குழந்தைகளை ஏற்றுவது கூடவே கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அருகிலோ, கூட்டங்களில் பெற்றோருடன் (Election Campaigns) குழந்தைகள் பங்கேற்றால் அது விதிமீறலில் சேராது .
அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை இந்த நடவடிக்கை வலியுறுத்துகிறது .
நாடு முழுவதும் இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு போடப்பட்டுள்ளது .
இந்திய தேர்தல் ஆணையத்தால் போடப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடுகளை மீறும் நபர்கள் மீதும் அந்தந்த கட்சிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக விடும் என்ற குறிக்கோளில் பல கட்சிகள் தீவிர பிரச்சார பணிகளில் ஈடுபாடே இப்போதிலிருந்தே ஆயுதமாக்கி வரும் நிலையில்.
அந்தந்த கட்சிகள் பல தேர்தல் குழுக்களை பிரித்து அவரவர்களுக்கு தனி தனியாக தேர்தல் பணிகளை வழங்கி வருகிறது.
Also Read :https://itamiltv.com/lal-salaam-trailer-is-releasing-this-evening/
எந்த முறையும் இல்லாமல் முறை அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் இரு கட்சிகளும் தனி தனியாக இந்த தேர்தலை சந்திக்க உள்ள நிலையில்
இருவரில் யாருக்கும் ஆதரவு அதிகம் என தற்போது வரை கணக்கிட முடியாத சூழலே நிலவி வருகிறது.