ITamilTv

Promo Song அயலான் புதிய ப்ரோமோ இன்று மாலை

Promo Song

Spread the love

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகி உள்ள ‘அயலான்’ திரைப்படத்தின் புதிய பாடலின் ப்ரோமோ (Promo Song) இன்று மாலை வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அறிமுக இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் எஸ்.கே-வின் துள்ளலான நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தான் ‘அயலான்’.

மிக பிரமாண்டமான பொருட்செலவில் கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படம் நெடு நீண்ட நாட்களாக உருவாக்கப்பட்டு வந்தது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், யோகிபாபு, கருணாகரன், பால சரவணன், இஷா கோபிகர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ட்ரைலர் கடந்த 5 ஆம் தேதி வெளியான நிலையில் அது ரசிகர்கள் மத்தியில் தாறுமாறான வரவேற்பை பெற்றது.

ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இத்திரைப்படம் 65 க்கும் மேற்பட்ட நாடுகளில், அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வௌியாக உள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12 ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படம் படம் குறித்த அப்டேட்டுகளும் பாடல்களும் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் தற்போது ஒரு புதிய (Promo Song) அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

Also Read : https://itamiltv.com/actor-gv-prakesh-directed-by-abhishek-1st-look-out/

அதன்படி ‘அயலான்’ திரைப்படத்தின் ப்ரோமோ பாடல் ‘Maanja Nee’ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகி உள்ளதாக அழகிய போஸ்டர் மூலம் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு தனுஷின் கேப்டன் மில்லர், விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ்,

சிவகார்த்திகேயனின் அயலான் அருண் விஜய்யும் மிஷன் சாப்டர் 1 ஆகிய திரைடபங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த பொங்கலுக்கு பல சூப்பர் ஹீரோக்களின் படங்கள் வெளிவரும் நிலையில்

எந்த படம் ரசிகர்களை கவர்ந்து தாறுமாறான வெற்றியை பெற போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.


Spread the love
Exit mobile version