தமிழ்நாடு முழுவதும் முத்துராமலிங்கத் தேவரின் 116ஆவது பிறந்தநாள் மற்றும் குருபூஜை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதியில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை என பலரும் பசும்பொன்னில் உள்ள மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பசும்பொன்னில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகை வந்தார்.அப்போது முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி அங்கேயே மாலை அணிவித்து வணங்கினார்.
தேசமும் தெய்வீகமும் தனது இரு கண்கள் என வாழ்ந்த மாமனிதர் முத்துராமலிங்கத் தேவர். அவரை வணங்குவது மிகப்பெரிய பாக்கியம் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அப்போதும் அங்கு கூடியிருந்தவர்கள் கடுமையான எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர். ‘துரோகியே திரும்பிப்போ என்றும், தேர்தல் ஆதாயத்திற்காக இங்கே வராதே’ என்றும் அவர்கள் முழக்கங்கள் செய்தனர்.
இதையடுத்து கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடன் வந்தவர்கள் எந்தவித எதிர்வினையும் ஆற்ற முடியாமல் மவுனமாக அங்கிருந்து திரும்பிச் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.