Site icon ITamilTv

இத்தனை நாளா இது தெரியாம போச்சே.. பழமொழிகளும் உண்மை அர்த்தங்களும்..!

Spread the love

“யானைக்கு காலம் வந்தால் பூனைக்கு காலம் வரும்”..! அப்படின்ற பழமொழி (proverbs) பொதுவா நம்ம எல்லா இடத்திலும் கேட்டிருப்போம். ஏன் நாம கூட அடிக்கடி யூஸ் பண்ணி இருப்போம். ஆனா இந்த பழமொழிக்கு உண்மையான அர்த்தம் என்னன்னு தெரியுமா? இந்த பழமொழியில் யானையும் இல்ல பூனையும் இல்ல.. இதுக்கு உண்மையான அர்த்தம் என்னன்னா ஆ + நெய். ஆ அப்டின்னா பசுவைக் குறிக்குது. ஆ நெய்னா பசு நெய். இதே மாதிரி தா பூ + நெய். பூ நெய் அப்டினா தேன். இதுதான் யானைக்கு காலம் வந்தால் பூ நெய்க்கு காலம் வரும்ன்ற பழமொழியோட அர்த்தம். பசு நெய்ய நீங்க டெய்லி சாப்பிட்டுட்டு வந்தா உங்களுக்கு உடம்பு வெயிட் போடும் அதனால அதுக்கு அப்புறமா உங்க வெயிட் குறைக்கிறதுக்கு நீங்க பூ நெய் அதாவது தேன் சாப்பிட்டு உங்க வெயிட்ட குறைக்கணும். இது தான் இந்த பழமொழியின் உடைய உண்மையான அர்த்தம்.

“கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை”..!

இந்த பழமொழியை பொதுவா நாம கோபத்துல எல்லார் கிட்டயும் சொல்லிருப்போம். இந்தப் பழமொழியோட (proverbs) உண்மையான அர்த்தம் என்னன்னு தெரியுமா? அதாவது, கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை.இத இப்படித்தான் உச்சரிக்கணும். கழு அப்படின்னா ஒரு வகையான கோரைப்புல். அந்தக் கோரைப் புள்ள பாய் தைக்க பயன்படுத்துறாங்க. அப்படி அந்த பாயை தைக்கும் போது அதிலிருந்து கற்பூர வாசனை வெளிவருமாம். அதனால தான் கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை அப்படின்ற பழமொழி திரிந்து கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை மாறி இருக்கு. அதுமட்டுமில்லாம இந்த கோரைப் பாயில், குழந்தைகளை தூங்க வைக்கும் போது எந்த வித பூச்சிகளும் குழந்தைகளை கடிக்காதாம்.

“சட்டியில இருந்தாதான அகப்பைல வரும்”..!

இந்த பழமொழிக்கு நம்மள்ள பலரும் பானைல இருந்தா தான தட்டுக்கு வரும்னு தவறா நினைச்சுட்டு இருக்கோம்..ஆனா உண்மைல இந்த பழமொழியோட அர்த்தம் என்னனா? சஷ்டி அப்டின்ற வார்த்தை திரிந்து சட்டி அப்டீன்னு ஆகிடுச்சு. அதேமாதிரி அக பை அதாவது நம்ம உடலினுள் இருக்கும் கர்ப்பப்பையை குறிக்குது. இதுக்கு என்ன அர்த்தம்னா சஷ்டியில் விரதம் இருந்தால் அக பையில் குழந்தை பாக்யம் கிடைக்கும் அப்டின்றதுதா உண்மையான அர்த்தம்.

“ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டமாம்”..!

இந்த பழமொழிக்கும்.. பிரச்சனைனு வந்தா எதிராளிக்கு கொண்டாட்டம்னு தவறாதான் நினைச்சுட்டு இருப்போம். ஆனா, இதுக்கு உண்மையான அர்த்தம் ஊர் இருண்டு பட்டால் கூத்தாடும் கூத்தாடிகளின் கொண்டாட்டங்கள் இருக்கும்ன்றது தான் அர்த்தம்.


Spread the love
Exit mobile version