இஸ்ரோவின் PSLV C60 ராக்கெட் இன்று இரவு விண்ணில் ஏவப்பட்ட உள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இந்தியாவின் பெருமைமிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, சந்திரயான் 3 திட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு பின் தனது அடுத்த இலக்கான சூரியனை ஆய்வு செய்ய ‘ஆதித்யா எல்-1’என்ற விண்கலத்தை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி தீவிர ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இதுமட்டுமின்றி சில சிறிய ரக செயற்கைகோளகையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று இரவு 9.58 மணிக்கு PSLV-C60 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
220 கிலோ எடையிலான 2 சிறிய ரக செயற்கைக்கோள்களை பூமியிலிருந்து 470 கி.மீ தொலைவில் வெவ்வேறு சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் . 2 செயற்கைக் கோள்களும் ஸ்பேஸ் ட்ராகிங் எனப்படும் முறையில் ஒன்றிணைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.