contract drivers pay hike : புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஒப்பந்த ஓட்டுனர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
“புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ஒப்பந்த ஓட்டுநர்களின் மாத ஊதியத்தை ரூ.10,804/- லிருந்து, ரூ. 16,796/- ஆகவும், ஒப்பந்த நடத்துனர்களின் மாத ஊதியத்தை ரூ. 10,656/-லிருந்து ரூ.16.585/-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் ந ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : மற்றுமொரு கள்ளச்சாராய மரணம்! – எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்!
உயர்த்தப்பட்ட இந்த மாத ஊதியத்திற்கான ஆணையினை முதல்-அமைச்சர், போக்குவரத்து ஆணையரும் புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநருமான,
Dr.A.S.சிவக்குமாரிடம் முதல்-அமைச்சர் அலுவலகத்தில் இன்று (04.07.2024) வழங்கினார். இந்த ஊதிய உயர்வு 2024, ஜூன் மாதத்திலிருந்து அமலுக்கு வரும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார் contract drivers pay hike.
இந்த நிகழ்ச்சியின் போது சட்டப்பேரவைத் தலைவர் செல்வம்.R.புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழகத்தின் பொது மேலாளர் (நிர்வாகம்) வி.கலியபெருமாள் ஆகியோர் உடனிருந்தார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.