புதுச்சேரியில் அமைச்சரை சந்தித்து அரசு சொத்தை விலைக்கு கேட்டதாக வெளியான தகவலுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
புதுச்சேரி விமான நிலையத்தை பார்வையிட்டு அங்கு ‘LIK’ படத்தின் படப்பிடிப்பை நடத்துவதற்கு அனுமதி கேட்கவே புதுச்சேரிக்கு சென்றேன். அப்போது மரியாதை நிமித்தமாக முதலமைச்சரையும், சுற்றுலாத்துறை அமைச்சரையும் சந்தித்தேன்.
என்னுடன் வந்த உள்ளூர் மேனேஜர் ஒருவர், அவருக்கு தேவைப்பட்ட விஷயம் தொடர்பாக அப்போது விசாரித்தார். இந்த நிகழ்வு தவறுதலாக என்னுடன் தொடர்புப்படுத்தி பேசப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக பகிரப்படும் மீம்ஸ்கள் மற்றும் ஜோக்குகள் நகைச்சுவையாக உள்ளது. ஆனால், தேவையற்றது என இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.