புதுச்சேரியில் ஜனவரி 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு..! – பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது மாநில அரசு..!

புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31 வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு கொரோனா வைரசின் மூன்றாவது அலை வீசத்தொடங்கி உள்ள நிலையில் புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் தோற்றும் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் நாடு முழுவதும் ஒமிக்ரான் பாதிப்பு 2,630 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 495 பேருக்கு புதிதாக ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 995 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் இருவர் ஒமிக்ரான் பாதிப்பால் உயிரிழந்தார்.

அதிகபட்சமாக மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் 797 பேருக்கும் , தலைநகர் டெல்லியில் 465 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியில் 2 பேருக்கு ஒமைக்றான் தொற்று உறுதியாகி உள்ளது.

இந்நிலையில் ஒமைக்ரான் கரோனா வகை நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இரவுநேர ஊரடங்கு உள்ளிட்டவை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனை அடுத்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியது. அதன்படி புதுச்சேரியில் ஜனவரி 31 வரை இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தி மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

மேலும் மால்கள், வணிக நிறுவனங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் திரையரங்குகள், உணவகங்கள், கலையரங்கம் உள்ளிட்டவற்றில் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டிருக்கிறது

Total
0
Shares
Related Posts