தமிழ் நிலத்தில் என்றும் நிலைத்து நிற்கும் பூலித்தேவரின் புகழ்! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்!

மாவீரர் பூலித்தேவரின் 308-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து பதிவு ஒன்றை தெரிவித்துள்ளார்.

மேலும், விடுதலைப் போராட்டத்துக்கான உணர்வைக் கிளர்ந்தெழச் செய்த மாவீரர் பூலித்தேவரின் புகழ் என்றும் தமிழ் நிலத்தில் நிலைத்து நிற்கும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

“ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இந்திய நிலப்பரப்பில் முதன் முதலில் போர்முரசம் கொட்டி, விடுதலைப் போராட்டத்துக்கான உணர்வைக் கிளர்ந்தெழச் செய்த மாவீரர் பூலித்தேவரின் 308-ஆவது பிறந்தநாள்!

அடக்க நினைத்தால் தமிழர் பொறுக்க மாட்டார், அந்நியர் ஆதிக்கத்தை அடித்து நொறுக்குவர் எனக் காட்டிய அவரது புகழ் என்றும் தமிழ் நிலத்தில் நிலைத்து நிற்கும்!” என்று தெரிவித்து உள்ளார்.

Total
0
Shares
Related Posts