துபாயில் நடைபெற உள்ள மாபெரும் கார் பந்தய போட்டியில் பங்கேற்க உள்ள நடிகர் அஜித் குமார் பயிற்சியின் போது நேற்று கோர விபத்தில் சிக்கினார். இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாக வலம் வந்த நிலையில் தற்போது அஜித்தின் நிலை குறித்து அஜித் ரேஸிங் அணி வீரர் ஃபேபியன் டுஃபியக்ஸ் விளக்கம் கொடுத்துள்ளார்.
அஜித்தின் நிலை குறித்தும் போட்டிக்கு தயாராகும் விதம் குறித்தும் பேசியுள்ள ஃபேபியன் டுஃபியக்ஸ் கூறியதாவது :
அஜித் சிறு காயங்கள் கூட இன்றி நலமுடன் உள்ளார். கற்பதற்கான பயணம் என்றுமே முடியாது என்பதற்கான ஒரு நினைவூட்டலாக இந்த நாள் இருந்தது. இடையூறுகள் எதுவாக இருந்தாலும் ரேஸிங் மீதான எங்களின் ஆர்வம் ஒவ்வொரு அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்ளவும், தொடர்ந்து முன்னேறவும் எங்களை தூண்டுகிறது.
Also Read : 2025 ஆண்டின் (IRBM) முதல் ஏவுகணை சோதனையை நடத்திய வடகொரியா – வலுக்கும் கண்டன குரல்கள்..!!
இந்த பாதை நிறைய பாடங்கள் நிறைந்தது. அதை ஒரு அணியாகவும், குடும்பமாகவும் எதிர்கொள்ள இன்னும் வலிமையுடன் தயாராக உள்ளோம் என ஃபேபியன் டுஃபியக்ஸ் தெரிவித்துள்ளார்.