தினேஷின் மனைவி ரச்சிதா பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் தனக்கு பிடித்த போட்டியாளர் யார் என்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விஜய் டிவி சீரியல்களில் ஹீரோயினாக நடித்து சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமான ரச்சிதா மகாலட்சுமி தன்னுடன் சீரியலில் நடித்த சக நடிகரான தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னர் இருவருமே சீரியல்களில் நடித்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து தினேஷும் பூவே பூச்சூடவா தொடர் மூலம் பேமஸ் ஆனார். இப்படி இருவருமே டிரெண்டிங் ஜோடியாக வலம் வந்தனர். இந்நிலையில், இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக தினேஷும் ரச்சிதாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த பிக்பாஸ் 6 சீசனில் ரச்சிதா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தபோது கூட, இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என ரசிகர்கள் விரும்பினர். ஆனால், வெளியே வந்த பின்னர் தினேஷ் தனக்கு மெசேஜ் அனுப்பி டார்ச்சர் செய்வதாக கூறி காவல்நிலையத்தில் ரச்சிதா புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், இந்த சீசனில் வைல்டு கார்டு எண்ட்ரியாக தினேஷ் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார். சில சமயங்களில் தினேஷ், ரச்சிதா உடன் தான் மீண்டும் சேர விரும்புவதை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால், ரச்சிதா அதற்கெல்லாம் மயங்கவில்லை. அவர் தினேஷை விவாகரத்து செய்ய வேண்டும் என்கிற முடிவில் உறுதியாக இருக்கிறார் என்பது மட்டும் அவரின் பதிவுகள் மூலம் தெரிகிறது.
அந்த வகையில், தற்போது இந்த சீசனில் தான் ஆதரவளிக்கும் போட்டியாளர் யார் என்பது குறித்து ரச்சிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், தனது சப்போர்ட் விசித்ராவுக்கு தான் என பதிவிட்டு தினேஷை எதிர்ப்பதை சூசகமாக தெரிவித்துள்ளார் என்பது விளங்குகிறது.
கடந்த சில வாரங்களாகவே பிக்பாஸ் வீட்டில் தினேஷும் விசித்ராவும் அதிகம் சண்டையிட்டுக் கொள்ளும் நிலையில், விசித்ராவுக்கு ஆதரவு தெரிவித்து தினேஷ் மீதுள்ள கோபத்தை ரசித்தா வெளிப்படுத்தி உள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.