தினேஷின் பிக்பாஸ் எண்ட்ரி.. “எனக்கு நீ… உனக்கு நான்”.. ரச்சிதா போட்ட எமோஷனலான பதிவு!!

தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் ரச்சிதாவின் கணவர் தினேஷ் வைல்டு கார்டு எண்ட்ரியாக சென்றுள்ள நிலையில், ஒரு எமோஷனல் பதிவு ஒன்றை போட்டுள்ளார் ரச்சிதா.

பிரிவோம் சந்திப்போம் தொடரில் நடித்ததன் மூலம் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்ட தம்பதி தான் தினேஷும், ரச்சிதா மகாலட்சுமியும். இந்த தொடரில் நடித்தபோது தினேஷுக்கும் ரச்சிதாவுக்கும் இடையே காதல் மலர்ந்ததையடுத்து கடந்த 2013-ம் ஆண்டு இருவரும் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு ‘நாச்சியார்புரம்’ என்ற சீரியலில் தினேஷும், ரச்சிதாவும் ஜோடியாக நடித்த போது இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேற்பாடு ஏற்பட்ட நிலையில், தினேஷை பிரிந்து தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்தார் ரச்சிதா. ஆனால் இதுவரை இருவரும் விவாகரத்து பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட ரச்சிதா, கணவர் தினேஷை பற்றி வாய்திறக்கவில்லை. ஆனாலும், அவரது கணவர் தினேஷ் வெளியே அவருக்காக பேட்டி கொடுத்து வாக்குகளை சேகரித்து, வந்தார்.

இதனால், பிக்பாஸுக்கு பின் அவர்கள் இருவரும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிலைமை தலைகீழாக மாறியது. தினேஷ் தன்னை தொந்தரவு செய்வதாக கூறி ரச்சிதா காவல் நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழைந்துள்ள தினேஷ் தன் வாழ்க்கை மோசமான நிலைக்கு வந்துவிட்டதாக ரச்சிதா பற்றி சூசகமாக பேசிவிட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார்.

இதனிடையே தான் நடிகை ரச்சிதா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிந்துள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவர் போட்டுள்ள அந்த பதிவில், அண்மையில் உயிரிழந்த தனது தந்தையின் போட்டோ முன்னர் தானும் தனது தாயும் கைகோர்த்து நின்றபடி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, உனக்கு நான்… எனக்கு நீ என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

இதன் மூலமாக இனி தினேஷுக்கு தன் வாழ்க்கையில் இடமில்லை என்பதை ரச்சிதா சூசகமாக கூறி உள்ளார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Total
0
Shares
Related Posts