பிரதமர் நரேந்திர மோடியை போல் நான் வெறும் வாக்குறுதி மட்டும் கொடுப்பவன் அல்ல. ஒரு வாக்குறுதி அளித்தால், அதை நிறைவேற்றுவேன் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது . இதற்காக தெலுங்கானா வந்துள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளார் .

பிரச்சாரத்தின்போது மக்களிடம் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது :
தெலங்கானா காலேஸ்வரம் பாசனத் திட்டத்தில், முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான BRS அரசு, மக்கள் பணம் 1,00,000 கோடியை முறைகேடு செய்துள்ளது .

மக்களிடம் இருந்து அவர் கொள்ளையடித்த பணத்தை மக்களுக்குத் திருப்பித் தர வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

பிரதமர் மோடியைப் போல் நான் வெறும் வாக்குறுதி மட்டும் கொடுப்பவன் அல்ல. ஒரு வாக்குறுதி அளித்தால், அதை எப்பாடுபட்டாவது நிச்சயம் நிறைவேற்றுவேன் என தெரிவித்துள்ளார்.