தமிழ்நாட்டின் ரயில்வே பணிகளுக்கென ஒன்றிய அரசு 6,626 கோடியை ஒதுக்கிய போதிலும், எந்த ரயில்வே திட்டத்திற்கும் அது முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்பதை மக்களவையில் சபையை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டும் என கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
ரயில்வே பணிகளுக்காக பட்ஜெட்டில் ஒட்டுமொத்தமாக ₹1,96,837 கோடி ஒதுக்கியுள்ள ஒன்றிய அரசு, அதிகபட்சமாக மகாராஷ்டிராவுக்கு ₹23,778 கோடி ஒதுக்கியுள்ளது.
Also Read : ஒர்க் ப்ரம் ஹோம் அரசியல் செய்யும் விஜய் – அர்ஜூன் சம்பத் விமர்சனம்..!!
தமிழ்நாட்டிற்கு ₹6,626 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், குஜராத்திற்கு ₹17, 155 கோடியும், உத்தரப் பிரதேசத்திற்கு ₹19,858 கோடியும், பீகாருக்கு ₹10,066 கோடியும், ஒடிசாவிற்கு 10,559 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு ₹14,745 கோடியும் ஒதுக்கியுள்ளது
தமிழ்நாட்டின் ரயில்வே பணிகளுக்கென ஒன்றிய அரசு ₹6,626 கோடியை ஒதுக்கிய போதிலும், எந்த ரயில்வே திட்டத்திற்கும் அது முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்பதை மக்களவையில் சபையை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டும்.
ரயில்வே உட்கட்டமைப்பு பணிகளை துரிதப்படுத்துவது, முன்பதிவில்லா பெட்டிகளை அதிகரிப்பது, பாம்பன் பாலம் திறப்பு, மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட ரயில் கட்டண சலுகை ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் எனவும் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.