தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட தென் மாநிலங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெளியில் வாட்டி வைத்து வந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் காணப்பட்டாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
அந்த வகையில் நேற்று கொடைக்கானலில் சுமார் 4 மணி நேரம் பெய்த மழையினால் சாலையில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மாலை நேரத்தில் பெய்த மழையால் அவர்கள் தங்கள் வேலைகளை முடித்து வீடு திரும்புவார்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட தென் மாநிலங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதே போல் திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் , கள்ளக்குறிச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 3ஆம் தேதி முதல் 07ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.