சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இன்று உடல்நல குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தற்போது தற்போது நலமுடன் இருப்பதாகவும் 2 நாட்களில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஜெயிலர் படத்தின் அட்டகாச வெற்றிக்கு பின் நடிகர் ரஜினிகாந்த தற்போது பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
அந்தவகையில் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
Also Read : உதகை மற்றும் கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை நீட்டிப்பு..!!
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
கூலி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வந்த நிலையில் மருத்துவப் பரிசோதனைக்காக இதய சிகிச்சை நிபுணரிடம் அனுமதி கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது .
ரஜினிகாந்திற்கு இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் இருந்த வீக்கத்தை, அறுவை சிகிச்சை இல்லாமல் TRANSCATHETER முறையில் வெற்றிகரமாக சரி செய்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.