உலகம் முழுவதும் உள்ள மக்கள் புதிய வருட பிறப்பை ஆட்டம் பாட்டத்துடன் கோலாகலமாக வரவேற்று நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அரசியல் தலைவர்கள் , திரை நட்சத்திரங்கள் என பலரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் தங்களது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் புத்தாண்டு தினத்தன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து பதிவு இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.
நடிகர் ரஜினிகாந்தின் புத்தாண்டு வாழ்த்து செய்தி :
நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுடுவான் புத்தாண்டு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.