ITamilTv

குவைத்தில் சிக்கி தவித்த 20 தமிழ் இளைஞர்களை மீட்ட தமிழக அரசு – டாக்டர் ராமதாஸ் பாராட்டு

Spread the love

குவைத் நாட்டில் சிக்கி தவித்த 20 தமிழ் இளைஞர்கள் மீட்ட தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :

குவைத் நாட்டில் வேலைக்காக சென்று ஏமாற்றப்பட்டு, தாயகம் திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அரியலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 20 இளைஞர்களை தமிழக அரசு மீட்டு தாயகத்திற்கு அழைத்து வந்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

குவைத்தில் தமிழக இளைஞர்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் குறித்து விளக்கி, அவர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து தமிழக அரசு அவர்களை மீட்டு வந்திருப்பது மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது.

குவைத்தில் இருந்து மீட்கப்பட்டு வந்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட வாழ்வாதார உதவிகளை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version