ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உலக கோப்பை போட்டிகளுக்கான தனது சம்பளத்தை நன்கொடையாக வழங்க இருப்பதாக அந்நாட்டின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.
பல உள்நாட்டு போர்களை கடந்து தற்போது தலிபான்களிடம் உள்ள ஆப்கானித்தான் நாட்டில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது . ஈரானின் எல்லைக்கு அருகில் உள்ள மேற்கு நகரமான ஹெராட்டில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் உள்ளூர் நேரப்படி 11:00 மணியளவில் 6.3 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த பயங்கர நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியும் பல கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன . பல அப்பாவி மக்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர் . இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, அடுத்தடுத்து ரிக்டர் அளவுகளில் 6.1, 5.6, 6.2, 5.9, 5.0, 4.7 என 7 முறை நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் அந்நாட்டில் உள்ள அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஏரளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் இந்த இடர்பாடுகளில் சிக்குள்ள மக்களை மிடுக்கும் பணிகள் தற்போது தீவிரமான நடைபெற்று வருகிறது .
ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் ஏற்கனவே பல தாங்க முடியாத கஷ்டங்களை அனுபவித்து வரும் நிலையில் தற்போது அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உலக கோப்பை போட்டிகளுக்கான தனது சம்பளத்தை நன்கொடையாக வழங்க இருப்பதாக அந்நாட்டின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் கூறிருப்பதாவது :
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், உலக கோப்பை போட்டிகளுக்கு தனக்கு கிடைக்கும் சம்பளம் முழுவதையும் நன்கொடையாக வழங்குகிறேன்
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிந்து மிகவும் வருந்துகிறேன் எனது நாட்டின் மக்களுக்காக நிதி திரட்டும் நடவடிக்கையிலும் தீவிரமாக ஈடுபடவுள்ளேன் என ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.