தென்னிந்திய சினிமாவில், குறுகிய காலத்தில் பெரும் உச்சம் தொட்ட அவர்களில் ஒருவரான நடிகை ராஷ்மிகா மந்தனா (rashmika mandanna) சமீபத்தில் மனக் கலக்கத்துடன் பேட்டி எடுத்திருப்பது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா (rashmika mandanna) பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார்.
மேலும், தற்போது பிரபல நடிகர் விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருந்தார். இதுவே, விஜயுடன் அவர் இணைந்து நடிக்கும் முதல் படம் ஆகும். மேலும், வம்சி இயக்கத்தில் உருவான இந்த படம் உலக அளவில் ரூ.250 கோடி பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்தது.
இந்த படத்தில் பெரிய அளவில் ராஷ்மிகாவிற்கு கதாபாத்திரம் இல்லை என்றாலும் கூட விஜய் தனக்கு பிடித்த நடிகர் என்பதாலேயே அந்த படத்தில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறியிருந்தார்.
மேலும், தனக்கு பெரிய அளவில் அதில் ரோல் இல்லை என்றாலும் விஜயுடன் திரையில் தெரிந்தாலே போதும் என்பதால் தான் வாரிசு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் மிகக் குறுகிய காலத்தில் பெரும் உச்சத்தை தொட்டவர்களில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்தாலும் கூட, அவருக்கு எதிரான விமர்சனங்களும், சர்ச்சைகளும் அதிகரித்த வண்ணம் தான் இருக்கின்றது. ராஷ்மிகாவின் சிரிப்பு, ஒர்க்கவுட், பேச்சு, முக பாவனை என அனைத்தையும் சமீப காலமாகவே பலரும் ட்ரோல் செய்து வரும் நிலையில், தனக்கு வரும் மோசமான கமெண்ட்டுகள் தன்னை மிகவும் காயப்படுத்துவதாகக் கூறி பேட்டியளித்துள்ளார்.
மேலும், அந்த பேட்டியில் நடிகை ராஷ்மிகா… “மக்களுக்கு என் உடல் தோற்றத்தில் பிரச்சினை இருக்கிறது. நான் ஒர்க் அவுட் செய்தால், ஒரு ஆணைப் போல தோன்றுவதாக சொல்கிறார்கள். ஒர்க்கவுட் செய்யாவிட்டால், உடல் எடை அதிகமாக இருப்பதாக சொல்கிறார்கள்.
நான் அதிகமாக பேசினால் கிரிஞ்ச் என்றும், நான் பேசாவிட்டால் திமிராக இருப்பதாகவும் கூறுகிறார்கள். நான் மூச்சு விட்டாலும் பிரச்சனை, நான் மூச்சு விடவில்லை என்றாலும் அவர்களுக்கு பிரச்சனை.
நான் என்னதான் செய்வது? சினிமாவில் நான் நிரந்தரமாக இருக்க வேண்டுமா? அல்லது விலக வேண்டுமா? என தனது மனக்குமுறலை அந்த பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்து பேசிய நடிகை ராஷ்மிகா, மக்கள் தன்னைப் பற்றிக் கூறும் கருத்துக்கள் யாவும் சரியானதாக இருந்தால் அதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றும் ஆனால், இது போன்று தவறாக என் மீது கருத்துகள் கூறுவது என் மனதை பாதிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
மேலும், உங்களுக்கு என்னிடம் பிரச்சனை இருக்கிறது என்றால், உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கூறுங்கள் என்றும், துஷ்பிரயோகம் செய்யாதீர்கள் என்றும், மேலும், அவர்கள் பயன்படுத்தும் சில வார்த்தைகள் மனதளவில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது எனவும் கூறியிருக்கிறார்.
மேலும், குறும்புத்தனமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்த நடிகை ராஷ்மிகா மந்தனா இப்படி மனமுடைந்து பேட்டி அளித்திருப்பது அவருடைய ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Papam ra 🥺 pic.twitter.com/lhSEX6eRKj
— Butcher (@karl__butcher) January 21, 2023