சிஎஸ்கே அணியில் ஜடேஜா (ravindra jadeja) – தோனி இடையே மோதல் ஏற்பட்டுள்ளதா என்ற பேச்சு நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருள் ஆகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஜடேஜாவின் சமீபத்திய டிவிட்டர் பதிவு தான்!
அவருடைய ட்விட்டர் பதிவில், “கர்மா உன்னை கண்டிப்பாக தண்டிக்கும். இப்போது இல்லை என்றாலும் பின்பாவது உன்னை கண்டிப்பாக தண்டிக்கும்” என்று கூறி உள்ளார். இதற்கு அவருடைய மனைவி உங்களுடைய பாதையில் நேராகச் செல்லுங்கள் என பதிலளித்திருக்கிறார்.
இந்த டிவிட்டை பார்த்த ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர். ஏனென்றால், இந்த ட்வீட் மேட்சில் நடந்த சம்பவத்துடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. நேற்று முதல்நாள் டெல்லி போட்டியில் வென்றதற்கு பின் ஜடேஜா (ravindra jadeja) – தோனி இடையே விவாதம் நடந்தது பெரிய பரபரப்ப ஏற்படுத்தி உள்ளது.
ஜடேஜா பந்துவீச்சில் 50 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார். அப்போது தோனி அவரை அழைத்து ஏதோ பேசினார். இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ரசிகர்கள் தோனி, ஜடேஜாவை திட்டியதாகவும், இதற்கு தான் ஜடேஜா இப்படி டிவிட் போட்டு இருக்கிறார் என்றும் கூறியுள்ளனர்.
இதில், மேற்கொண்டு பார்க்கும்போது… அந்த ட்வீட்டில் ‘Definitely’ என்ற வார்த்தைய ஜடேஜா பயன்படுத்தி உள்ளார். அதை வைத்து யூகிக்கப்படுவது என்னவென்றால், சில நாட்கள் முன் தோனியின் ஓய்வு குறித்த கேள்விக்கு “Definitely Not” என்று பதில் அளித்திருப்பார் தோனி..
ஆனால், இப்போது ஜடேஜா ‘Definitely’.. என்ற வார்த்தைய குறிப்பிட்டுள்ளார். ஆகையால், இது தோனியின் ஓய்வை மையப்படுத்திய, ‘Definitely Not’ VS ‘Definitely’ ஆகவும் இந்த விவகாரம் பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டே ஜடேஜா சிஎஸ்கே கேப்டன்சியில் இருந்து நீக்கப்பட்ட போது அவர் மேல் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதோடு அவர் சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுவார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. அதையடுத்து, அவருடைய கேப்பிடன்சி பரிக்கப்பட்டதால் நிர்வாகத்தின் மேல் அதிருப்தில இருக்கிறார்;
கடந்த சில போட்டிகளில் அதனால் தான் கொஞ்சம் சரியாக விளையாடவில்லை; இந்த சீசனில் அவர் சிஎஸ்கேவில் ஆடும் விருப்பத்திலேயே இல்லை. தோனி அவரிடம் பேசி சமாதானம் செய்த காரணத்தினாலேயே அவர் மீண்டும் அணிக்குள் வந்தார் என்று பல்வேறு பேச்சுகள் எழுந்த நிலைல் தான், இப்போது 2 பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வர தொடங்கி உள்ளது.
இதற்கு நேரடியாக தோனி, ஜடேஜா அல்லது csk அணி தரப்பில் இருந்து விளக்கம் வருமா? அப்படி வரும்பட்சத்தில், என்ன மாதிரியான விளக்கம் வரும் என்று பார்க்கலாம்.