ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை பின்பற்றாத காரணத்தால் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளின் மோசடி வகைப்பாடு மற்றும் அறிக்கையளித்தல் தொடர்பில் ரிசர்வ் வங்கி பல்வேறு வழிகாட்டுதல்களை வர்த்தக வங்கிகளுக்கு வழங்கியுள்ளது.
ஆனால், சிவப்புக் கொடி கணக்குகள் முறையாக வகைப்படுத்தாதது, பாதுகாப்பு ரசீதுகள் தொடர்பான அறிக்கைகளை வெளியிட தவறியது என வழிகாட்டுதல்களை யூனியன் பாங்க் ஆப் இந்தியா பின்பற்றவில்லை என ரிசர்வ் வங்கி குற்றம்சாட்டியுள்ளது. இது ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலுக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சம்பந்தபட்ட வங்கியிடம் விளக்கம் கேட்டு ரிசர்வ் வங்கி நோட்டீஸ் அனுப்பியது. யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவும் தங்கள் தரப்பிலிருந்து விளக்கம் கொடுத்தது. இதனையடுத்து யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு ஒரு கோடி ரூபாயை அபராதமாக விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.