மதுரையில் ஜவுளி கடைக்குள் இளம்பெண் ஒருவர் அத்துமீறி உள்ளே நுழைந்து ஊழியரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ம்துரையில் ஜவுக்கடை ஒன்றில் இளம்பெண் ஒருவர் அத்துமீறி நுழைந்தார். அப்போது அங்கிருந்த பெண் ஊழியருடன் வாக்குவாதம் செய்கிறார். இதில் ஆத்திரம் அடைந்த இளம்பெண் சரமாரியாக தாக்குகிறார். இதில் அந்த பெண் ஊழியர் நிலைதடுமாறி கீழே விழுகிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, விசாரித்தபோது அந்த சம்பவம் விளக்குத்தூண் பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் நடந்தது தெரியவந்தது.
மதுரை உத்தங்குடி பகுதியை சேர்ந்த மார்நாடு மகள் உமா. 24 வயதான உமா , விளக்குத்தூண் போலீசில் கொடுத்து உள்ள புகார் மனுவில் கூறும்பொழுது, தான் கொத்தவால்சாவடி சந்து பகுதியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருவதாகவும், தான் வேலை பார்க்கும் கடைக்கும் அருகில் உள்ள கடைக்கும் இடையில் தொழில் வியாபார போட்டி உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அந்த மனுவில் உமா கூறும்பொழுது,
சம்பவத்தன்று உமா காலை கடையில் இருந்ததாகவும் அப்போது அருகிலுள்ள ஜவுளிக் கடை உரிமையாளர் ராஜ்தீப் மகள் சோனம் என்பவர் கடைக்குள் அத்துமீறி நுழைந்தபோது நான் அவரிடம் ‘என்ன வேண்டும்?’ என்று கேட்டேன் எனவும் தெரிவித்தார்.
அப்போது சோனம் தன்னை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றதாக தெரிவித்த அவர் , தன்னை தாக்கிய இளம்பெண் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பெண் ஊழியர் உமா அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விளக்குத்தூண் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.