dmk leader son arrested : வேலூர் அலமேலுமங்காபுரம் அருகே வெங்கடாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் திமுக நிர்வாகியின் மகன் மது குடித்துவிட்டு, சிகரெட் புகைத்துக் கொண்டு, பட்டாக்கத்திகளுடன் கேங்ஸ்டர் போல ரீல்ஸ் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
வேலூர் வெங்கடாபுரம் அங்கன்வாடி மையத்தில் பட்டா கத்திகளுடன் மதுபோதையில் ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட வழக்கில் திமுக பிரமுகரின் மகன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க : வங்கக் கடலில் உருவாகிறது “ரீமல்” புயல் – இந்திய வானிலை மையம்!
திமுக வேலூர் ஒன்றிய செயலராக இருக்கும் ஞானம் என்கிற ஞானசேகரன் என்பவரது மகன் சரண். இவர் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து வேலூர் அலமேலுமங்காபுரம் அருகே வெங்கடாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் குடிபோதையில்,
சிகரெட் புகைத்தபடி பட்டாகத்திகளுடன் கேங்ஸ்டர் போன்ற ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பலரும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை விடுத்தனர்.
ஏழை குழந்தைகள் உணவு அருந்தும் அங்கன்வாடி மையத்தை இப்படி மதுகூடமாக மாற்றியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியினர்.
அதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட திமுக பிரமுகரின் மகன் உட்பட மூன்று பேரை கைது செய்து உள்ளனர் dmk leader son arrested.